திருமருகலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

திருமருகலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-27 22:30 GMT
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு மூலம் 7 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள் குருவாடி, அண்ணாமண்டபம், போலகம், திருச்செங்காட்டங்குடி, வள்ளுவன் தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடிய நிலை உள்ளது. இதனால் கடன் பெற்று சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவதா வேதனை தெரிவிக்கின்றனர்.

கொள்முதல் நிலையம்

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்படுவதற்கு முன் குறுவை அறுவடை பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே திருமருகலில் இயங்கி வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் உடனே திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்