தென்மேற்கு பருவமழை பெய்யாததால் கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் புதிய அணை வறண்டது
கொடைக்கானல் பகுதியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் புதிய அணை வறண்டு காணப்படுகிறது.;
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய அணை மற்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய மனோரஞ்சிதம் அணை ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் புதிய அணை வறண்டது.
அதேபோல் பழைய அணையில் 8 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது (மொத்த உயரம் 21 அடி). இதன்மூலமும் ஏரிச்சாலை அருகே உள்ள ஜிம்கானா பகுதியிலுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் புதிய அணை வறண்டதால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய அணை வறண்டு காணப்படுவதால் அதனை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய அணை வறண்டதால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஏரிச்சாலையின் அருகே உள்ள ஜிம்கானா பகுதியில் 10 ஆழ்துளை கிணறுகள் பழுது பார்க்கப்பட்டு அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும் பழைய அணையின் அருகில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அத்துடன் புதிய அணை வறண்டதால் அதனை தூர்வாருவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது’ என்றார்.