எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது - குமாரசாமி மனைவி அனிதா எம்.எல்.ஏ. பேட்டி

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கன்னட ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவியும், எம்.எல்.ஏ.வுமான அனிதா குமாரசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-;

Update: 2019-07-26 22:42 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனால் முதல்-மந்திரியாக பதவி ஏற்க எடியூரப்பா அவசரப்படுகிறார். 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 பேரின் ஆதரவு தேவை. ஆனால் 105 பேரின் ஆதரவு தான் பா.ஜனதாவுக்கு உள்ளது. அவர் தற்போது முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அந்த முடிவை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்