காஞ்சீபுரம் அருகே ஆட்டோ-டெம்போ மோதல்; புதுமாப்பிள்ளை பலி

காஞ்சீபுரம் அருகே ஆட்டோ- மினிடெம்போ மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-07-26 21:45 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 22). ஆட்டோ டிரைவர், இவருக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. இந்த நிலையில் மோகன்ராஜ் ஆட்டோவில் காஞ்சீபுரத்தில் இருந்து ஜெ.ஜெ.நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிறுகாவேரிப்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது ஆட்டோவும் வேலூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த ஒரு மினி டெம்போவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன.

இதில் ஆட்டோ டிரைவர் மோகன் ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு உடனடியாககாஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில்அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்