உத்தனப்பள்ளி அருகே பெண் மர்மசாவு-உறவினர்கள் சாலைமறியல்
உத்தனப்பள்ளி அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ளது பெல்லட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 30). தனியார் கல்குவாரி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், உத்தனப்பள்ளி அருகே உள்ள தவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகள் புவனேஸ்வரி (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை புவனேஸ்வரி வீட்டில் தூக்கில் மர்மமான முறையில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே புவனேஸ்வரி மர்மமான முறையில் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள், தவசானப்பள்ளி கிராம பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை பெல்லட்டியில் திரண்டனர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள் சாலையின் நடுவில் பெரிய கற்களையும், மரங்களையும் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். புவனேஸ்வரியின் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை அவரது கணவரே அடித்து கொலை செய்து விட்டு நாடகம் ஆடுகிறார் என்று புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.
இதையடுத்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, சூளகிரி தாசில்தார் ரெஜினா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவலிங்கம் (ராயக்கோட்டை), முத்துகிருஷ்ணன் (சூளகிரி) மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீண்டும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் மறியலை கைவிடவில்லை. மேலும் புவனேஸ்வரியின் உடலை அங்கிருந்து கொண்டு செல்லவும் அனுமதிக்கவில்லை.
பதற்றம்
நேற்று மாலை 5.45 மணியில் இருந்து இரவு 8.45 மணியை தாண்டியும் சாலை மறியலை பொதுமக்கள் கைவிடவில்லை. இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக சூளகிரி - உத்தனப்பள்ளி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதற்கிடையே அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் மற்றும் ஏராளமான கடைகளை மாலை முதலே பூட்ட தொடங்கினார்கள். இரவு வரை இந்த சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமாக காணப்படுகிறது.