போலி பாஸ்போர்ட்டில் சிறுமிகளை மலேசியா அழைத்து செல்ல முயன்ற 2 பேர் கைது
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் சிறுமிகளை அழைத்துச்செல்ல முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக மலேசியாவுக்கு விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த மக்பூர் மசூத்(வயது 38), மமூன் மியா(32) ஆகியோர் 2 சிறுமிகளுடன் செல்ல வந்தனர்.
அப்போது அவர்கள், தங்களை கணவன்-மனைவிகள் என்றும், சுற்றுலா வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாகவும் கூறினார்கள். 4 பேரின் பாஸ்போர்ட்டுகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் சிறுமிகள் 2 பேரின் பாஸ்போர்ட்டுகளும் போலி என்பதும், அவர்கள் இருவரும் பர்மாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பிடிபட்ட 2 சிறுமிகளும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் நடேசன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வங்காளதேசத்தை சேர்ந்த மக்பூர் மசூத், மமூன்மியா இருவரையும் கைது செய்தனர். இருவரும் எதற்காக போலி பாஸ்போர்ட்டில் 2 சிறுமிகளையும் மலேசியாவுக்கு அழைத்துச்செல்ல முயற்சி செய்தனர்? என விசாரித்து வருகின்றனர்.