ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: திருவாரூரில் 770 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 770 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவாரூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்தை பாதிக்கும் என்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 23-ந் தேதி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
திருவாரூரில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய விவசாயிகளின் பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. அங்கு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்ட காவிரி படுகை பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி உள்பட 770 பேர் மீது திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.