குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 73 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3 ஆயிரத்து 152 குழந்தைகள் தங்கி உள்ளனர். அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து இல்லங்களிலும் காவலர்கள் இருக்க வேண்டும். அவர்களது நடத்தை முறைகளை ஆராய்ந்து பணியில் அமர்த்த வேண்டும். திடகாத்திரமானவராக இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு மையங்களில் பெண்களை காவலராக நியமிக்க வேண்டும்.
குழந்தைகள் நலக்குழு அவ்வப்போது குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக குழந்தை தத்தெடுப்பதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு பலகைகள் அமைத்தல், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகளின் இல்லங்களில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், மாவட்ட கல்வி அலுவலர்கள் வசந்தா (தூத்துக்குடி), லட்சுமணன் (திருச்செந்தூர்), குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பரிதா செரின், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.