வீடூர் அணை தூர்வாரப்படுமா?
வீடூர் அணை தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே தொண்டி, சங்கராபரணி ஆறுகள் இணைந்த வீடூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அணைதான் வீடூர் அணை. விக்கிரவாண்டி ஒன்றியம், மயிலம் ஒன்றியம், வானூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.
கடந்த 1959-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கக்கனின் முயற்சியால் இந்த அணை கட்டப்பட்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
மழைக்காலத்தில் சங்கராபரணி, தொண்டியாற்றில் வரும் தண்ணீரை இந்த அணையில் தேக்கி வைத்து தமிழ்நாட்டில் 2,200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படும். இதனால் புதுச்சேரி, வானூர், விக்கிரவாண்டி, மயிலம் பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.மேலும் இப்பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. தற்போது அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் நீராதாரம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அணை பகுதி மண்ணால் தூர்ந்துபோய் உள்ளதால் மழை காலங்களில் அணையில் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே இந்த இடைப்பட்ட காலத்துக்குள் அணையின் நீர்பிடிப்பு பகுதியை விரைவில் தூர்வாரினால் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் நீர்பிடிப்பு பரப்பளவு அதிகமாகும். இதன் மூலம் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைப்பதால் நீராதாரமும் பன்மடங்கு உயரலாம். அணையின் மொத்த நீர்மட்டமான 32 அடியில் தற்போது 8 அடிக்கும் கீழ் நீர்மட்டம் குறைந்து குட்டைபோல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது.
மேலும் வீடூர் அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் விவசாயிகள், ஆடிப்பட்டத்திற்கு நாற்றங்கால் விடும் பணியை செய்யாமல் தயக்கம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து 3 வருடங்கள் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு போனதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அணையில் குவிந்துள்ள மண்ணை அகற்றினால் நீர்பிடிப்பு அதிகரிக்கும். பல ஆண்டுகளாக சிலர் அணையை ஆக்கிரமித்து நிலமாக சமன் செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மேடான பகுதியை ஆழப்படுத்தி மண்ணை வாரினால் அணையில் தண்ணீர் நிற்கும் பரப்பளவை மேலும் அதிகரிக்க முடியும். எனவே பருவமழை தொடங்கும் முன்பே பொதுப்பணித்துறை தனிக்கவனம் செலுத்தி வீடூர் அணை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.