அடுத்த மாதம் 4-ந் தேதி நடக்கிறது பேரிடர் பாதுகாப்பு, சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
மாவட்டத்தில் பேரிடர் பாதுகாப்பு மற்றும் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 4-ந் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
பரங்கிப்பேட்டை,
பேரிடர் பாதுகாப்பு மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை(வடக்கு) கூழையாறு கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசியதாவது:-
பேரிடர் பாதுகாப்பு மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 4-ந் தேதி நடைபெறவுள்ளதையொட்டி அது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் அவ்வப்போது புயல் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. புயலின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம்.
இதனால் பேரிடர் காலங்களில் அவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்வது, நமது உடமைகள், கால்நடைகள் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும், தொற்றுநோய் பரவாதவாறும், நம்மை நாமே அரசுடன் இணைந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இதுபோன்ற மாதிரி ஒத்திகை, பேரிடர் பயிற்சி மிக முக்கியமான ஒன்றாகும்.
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பது, விரைந்து மின்சார வசதி செய்து தருவது, மீட்பு குழுவினர், காவல்துறையினர் புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்களை விரைவாக அப்புறப்படுத்துவது, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உணவு, நீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒன்றாக இணைந்து பேரிடர் காலங்களில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தணித்தல் துறையின் மூலமாக TN SMART செல்போன் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தங்கள் செல்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து, பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம், புயல் மற்றும் பேரிடர் தொடர்பான விழிப்பறிக்கை தெரிவிக்கப்படும். இது தங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பயன் உள்ளதாக இருக்கும். இச்செயலியை அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், சப்-கலெக்டர்கள் விசுமகாஜன்(சிதம்பரம்), பிரசாந்த்(விருத்தாசலம்), சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)ஆனந்தன், இணை இயக்குனர் (வேளாண்மை) வேல்விழி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, வட்டாட்சியர் ஹரிதாஸ், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.