சிறுமி பாலியல் பலாத்காரம்: துப்புரவு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2019-07-24 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். காலனியை சேர்ந்தவர் அடைக்கலம்(வயது59). துப்புரவு தொழிலாளி. இவரது வீட்டிற்கு 15 வயது சிறுமி டி.வி. பார்ப்பதற்காக வந்து செல்வது வழக்கம்.

அந்த சிறுமியின் மீது அடைக்கலத்திற்கு ஆசை வந்தது. அவரை எப்படியாவது பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தார். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் டி.வி. பார்ப்பதற்காக 15 வயது சிறுமி சென்றாள்.

அவளுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அடைக்கலம் கொடுத்தார். அதை வாங்கி குடித்த சிறுமி சிறிதுநேரத்தில் மயக்கம் அடைந்தாள். பின்னர் சிறுமியை அடைக்கலம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தாள். பின்னர் அவளுக்கு கர்ப்பம் கலைந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தாள். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலத்தை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா, ஏட்டு பூபதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை நீதிபதி விசாரணை செய்து அடைக்கலத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்