பெருந்துறை அருகே தூக்குப்போட்டு 10–ம் வகுப்பு மாணவர் தற்கொலை

பெருந்துறை அருகே தூக்குப்போட்டு 10–ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-07-24 22:30 GMT

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி ரைஸ்மில் புதூரை சேர்ந்தவர் சோலையரசன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சந்தனலட்சுமி (35). இவர்களுக்கு கவுதம் (17), நிருபன் (13) என ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கவுதம் அந்தப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பும், நிருபன் 7–ம் வகுப்பும் படித்து வந்தனர். கவுதமுக்கு வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மனமுடைந்த கவுதம் நேற்று முன்தினம் வீட்டின் அருகே பந்தலில் உள்ள கம்பில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதனை கவனித்த கவுதமின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கவுதம் இறந்துவிட்டதாக கூறினார்கள். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் திங்களூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதம் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்