வடமதுரை அருகே வேன் கவிழ்ந்து 34 மாணவர்கள் படுகாயம்
வடமதுரை அருகே வேன் கவிழ்ந்து 34 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே முள்ளிப்பாடியில் தனியார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மோளப்பாடியூர், எட்டிக்குளத்துப்பட்டி, ஈ.புதூர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளை சேர்ந்த மாணவர் கள் வாடகை வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அதன்படி நேற்று காலை வழக்கம் போல் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. வேனில் 40 மாணவர்கள் பயணம் செய்தனர். வேனை கருதணம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 37) என்பவர் ஓட்டினார். பாடியூர்-மோளப்பாடியூர் சாலையில் உள்ள பட்டாளம்மன் கோவில் அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், வேனின் இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் கூச்சல் போட்டனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மோளப்பாடியூரை சேர்ந்த தாரணீஸ் (வயது 6), பானுமதி (13), ஹாசினி (6), தாரணி (7), எட்டிக்குளத்துப்பட்டியை சேர்ந்த அஜ்பிரசாத் (13), ஐஸ்வர்யா (11), அபிநயா (12), ஈ.புதூரை சேர்ந்த கவுசல்யாதேவி (11), காவியா (12), மகாலட்சுமிபுரத்தை சேர்ந்த யாசிதா (8), பூஜா (7) உள்ளிட்ட 34 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக் காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.