வானவில் : போர்டபிள் ஹார்டிஸ்க்
தகவல் திருட்டு இந்த நவீன உலகில் அதிகமாகத்தான் உள்ளது. இதனால் தகவல்களை பாதுகாப்பது மிகப் பெரும் சவாலாக உள்ளது. இதனாலேயே பல முக்கியமான மென்பொருள் சார்ந்த நிறுவன ரகசியங்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இத்தகைய தகவல் பாதுகாப்புக்கு தேவைப்படுவது எஸ்.எஸ்.டி. எனப்படும் தகவல் சேமிப்பு கருவி.
வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் ‘மை பாஸ்போர்ட் கோ’ என்ற பெயரிலான தகவல் சேமிப்பு கருவியை தயாரித்துள்ளது. கையில் எடுத்துச் செல்லும் வகையில் மிகச் சிறியதாகவும், 2 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் பாதிப்படையாத வகையில் ரப்பர் மேல் பகுதியைக் கொண்டதாக இந்த எஸ்.எஸ்.டி. உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹார்ட் டிரைவ்களை விட இது இரண்டரை மடங்கு விரைவாக செயல்படும் தன்மை கொண்டது.
இதில் 500 ஜி.பி. நினைவகத்தை சேமிக்கும் தன்மை கொண்டது மற்றும் 1 டெரா பைட் அளவுக்கு தகவல் சேமிக்கும் தன்மை கொண்டது என இரண்டு வகை ஹார்ட் டிரைவ்கள் வந்துள்ளது.
500 ஜி.பி. சேமிக்கும் வசதி கொண்ட மாடல் விலை ரூ.14,500. ஒரு டெரா பைட் சேமிக்கும் திறன் கொண்ட மாடல் விலை ரூ.29,500. இது 95 X 65 X 10 மி.மீ என்ற அளவில் வந்துள்ளது. இதன் எடை வெறும் 55 கிராம் மட்டுமே.
இந்த ஆண்டு தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச மின்னணு பொருள் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த டிரைவ் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. தகவல்களை பத்திரமாக பாதுகாக்க விரும்புவோருக்கு ஏற்றது.