வானவில் : பலத்த காற்றை தாக்குப்பிடிக்கும் பலமான குடை

இங்கிலாந்து கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ளது இந்த குடை.

Update: 2019-07-24 07:33 GMT
இந்த குடை அலுமினியத்தால் ஆனது. இதன் கேன்வாஸ் துணி ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று, கடுமையான மழை இவற்றை தாங்கி நிற்கும் வகையில் உறுதியான அலுமினிய கம்பிகளால் ஆனது. நீர் புகா தன்மை கொண்ட கேன்வாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கைப்பிடி அழகுற உருவாக்கப்பட்டுள்ளதோடு, தோலினால் ஆன மேல் உறை மிக அழகாக தைக்கப்பட்டு பார்ப்பதற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. இதன் விலை சுமார் ரூ.16 ஆயிரமாகும்.

மேலும் செய்திகள்