நம்பிக்கை தீர்மானம் தோல்வி: ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - எடியூரப்பா பேட்டி

நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்தது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று எடியூரப்பா கூறினார்.;

Update: 2019-07-24 00:20 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு கர்நாடக பா.ஜனதா தலைவரும், முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ளவருமான எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். மாநிலத்தில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த குமாரசாமி அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் இருந்தனர். அடுத்து வரும் நாட்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறுகையில், “குமாரசாமி அரசு கவிழ்ந்துவிட்டது. இதன் மூலம் கர்நாடகத்தை பிடித்திருந்த கிரகணம் அகன்றுவிட்டது. நாளை (இன்று) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் சட்டசபை கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பிறகு நாங்கள் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவோம்“ என்றார்.

மேலும் செய்திகள்