விருத்தாசலத்தில் சப்-கலெக்டரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
விருத்தாசலத்தில் சப்-கலெக்டரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்தை விருத்தாசலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்பாக சந்தித்ததாக தெரிகிறது. அப்போது அந்த வக்கீலை சப்-கலெக்டர் பிரசாந்த் அவமதித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்ததும்விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் நேற்று ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்கீலை அவமதித்ததாக கூறி சப்-கலெக்டர் பிரசாந்த்தை கண்டித்து வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு வக்கீல் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வக்கீல் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சங்க தலைவர்கள் மகேந்திரவர்மன், சிவாஜி சிங் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமாதானம் ஆகாத வக்கீல்கள் அங்குள்ள கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.