தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தீ விபத்து: டெலிபோன், இணைய சேவைகள் பாதிப்பு

மராட்டிய அரசுக்கு சொந்தமான மகாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட் (எம்.டி.என்.எல்.) நிறுவனம் மும்பை, நவிமும்பை, தானே நகரங்களுக்கு தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவையை வழங்கி வருகிறது.

Update: 2019-07-23 22:50 GMT
மும்பை,

மும்பை மேற்கு புறநகர் பாந்திராவில் உள்ள எஸ்.வி. சாலை பகுதியில் 9 மாடி கட்டிடத்தில்  இதன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டித்தில் சிக்கிய 84 ஊழியர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீண்டனர்.

இந்த தீவிபத்து சம்பவத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் இணைய சேவை மற்றும் டெலிபோன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து எம்.டி.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்டிடத்தில் தீ விபத்தின் காரணமாக பந்திரா, காலாநகர், கேர்வாடி, பாலிஹில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிபோன் மற்றும் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சேவைகள் 7 முதல் 8 நாட்களில் சரிசெய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்