அடித்து துன்புறுத்துவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்
அடித்து துன்புறுத்துவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் மணிமொழி (வயது 54). இவர் தற்போது திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது கர்நாடக மாநிலம் மாண்டியாவை அடுத்த கிருஷ்ணராயர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரதீமா என்கிற ராணி (32) என்பவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு திருச்சியில் எனது பெண் குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்தேன். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிமொழி திருச்சியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மூலமாக அறிமுகமானார். மணிமொழி “தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் விபத்தில் இறந்து விட்டதாகவும், மகனை கவனித்துக்கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்றும் கூறியதோடு, மேலும் என்னையும், எனது மகளையும் நன்றாக கவனித்துக்கொள்வதாகவும், மகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார்”. அந்த வாக்குறுதியை நம்பி அவருடைய சொந்த ஊரான வெள்ளகோவிலுக்கு சென்று கடந்த 2014-ம் ஆண்டு முதல் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகிறோம்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் எனக்கும் அவருக்கும் கிருஷ்ணராயர் பேட்டையில் வைத்து திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்தை நாங்கள் பதிவு செய்யவில்லை. அவர் எனக்கு தங்கத்தாலி, தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், கைசங்கிலி என 15½ பவுன் நகைகளை வாங்கித்தந்தார்.
இந்த நிலையில் பெருமாநல்லூர் அருகே உள்ள இளம்பெண் ஒருவருடன் மணிமொழிக்கு தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் என்னை அடித்து, உதைத்ததுடன் நகைகளை கொடுக்குமாறு கூறி கொலைமிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது உறவினர்களுடன் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தேன்.
அப்போது அங்கு வந்த மணிமொழி மற்றும் அவருடைய உறவினர்கள் எனது தாயாரிடம் இருந்து 46 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.46 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டனர். நகை, பணத்தை பறித்துக்கொண்டு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் மணிமொழி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக மாநகர போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு ) சுரேஷ், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து மணிமொழி மற்றும் பிரதீமா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதீமாவுக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆன நிலையில் கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.