எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு: சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஏன்? சட்டசபையில் விளக்கம்
எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்த நிலையில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
அன்பழகன்:- இப்போது சிறப்பு சட்டமன்றம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? பட்ஜெட் கூட்டத்தில் கூட அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 தீர்மானங்களை கொண்டு வந்திருக்கலாம். இப்போதைய நிலையில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் அவசியமா? பொதுமக்கள் தொடர்பான நிறைய பிரச்சினைகள் உள்ளன. இந்த சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாள் நடத்தப்போகிறீர்கள்?
அரசு கொறடா அனந்தராமன்:- முக்கியமான பிரச்சினைகளுக்காகத்தான் சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ளது. மாணவர்களை பாதிக்கும் நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பது முக்கியமான பிரச்சினை இல்லையா?
சாமிநாதன் (பா.ஜனதா):- இரவு 10 மணிக்கு மேல் தீர்மானங்களை கொண்டுவந்து கொடுத்து காலையில் பேச சொன்னால் எப்படி?
(தொடர்ந்து அரசு கொறடா அனந்தராமன் பேச, அதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிக்க சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது)
அன்பழகன்:- இங்கு தெருச்சண்டை போடுவதுபோல் உள்ளது. தீர்மானம் குறித்து முன்பே தெரிவிக்காமல் எம்.எல்.ஏ.க்களின் உரிமைகளை ஏன் பறிக்கிறீர்கள்?
சபாநாயகர் சிவக்கொழுந்து:- எம்.எல்.ஏ.க்களின் உரிமையை பறிப்பது நோக்கமல்ல. மிக முக்கியமான பிரச்சினைகள்தான் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் மீது பேச உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
(இருந்தபோதிலும் தொடர்ந்து காங்கிரஸ்-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. தனக்கு வழங்கப்பட்ட அலுவல் பட்டியலை கிழித்து எறிந்தார்)
அன்பழகன்:- எம்.எல்.ஏ.க்களின் உரிமையை பறிக்கிறீர்கள். எங்கள் கேள்விக்கு பதில் தராமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மட்டும் பேச அனுமதிக்கிறீர்கள். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு கூறிவிட்டு அன்பழகன் எம்.எல்.ஏ. சபையை விட்டு வெளியேறினார். அவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜே.ஜெயபால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரும் எம்.எல்.ஏ.க்களின் உரிமையை பறிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில் சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுவை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பி உள்ளோம். இதற்கிடையே நீர்வள மேம்பாடு தொடர்பாக அறிக்கை கொடுத்துள்ளனர். பக்கத்து மாநிலங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள நிலையை நாம் அறிவோம். அதேபோன்ற நிலை புதுச்சேரியில் இல்லை. இருந்தபோதிலும் எதிர்கால சந்ததியினருக்காக நாம் நீரை சேமிக்கவேண்டும். அதற்கான கூட்டம்தான் இது. இதற்கு முன் இதேபோல் சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணிக்கிறது. மேலும் நீட், நெக்ஸ்ட் தேர்வுகள் வந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையை கொண்டுவந்து மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. பண்டித நேருவின் கொள்கைப்படி புதுவையில் மும்மொழி கொள்கை வேண்டும். விருப்பப்பட்டால் இந்தியை படிக்கலாம். ஆனால் வற்புறுத்தக்கூடாது. புதுவை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.