நாகையில் குற்ற செயல்களை தடுக்க ரோந்து பணி போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
நாகையில், குற்ற செயல் களை தடுக்க ரோந்து பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
நாகப்பட்டினம்,
நாகை வெளிப்பாளையம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் அதனை முன்கூட்டியே தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குற்ற செயல்களை கண்டுபிடித்து தடுப்பதற்காக புதிதாக 4 ரோந்து படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய ரோந்து படையின் ரோந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கி, கொடியசைத்து ரோந்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த ரோந்து படையில் இடம் பெற்றுள்ள 16 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அந்தந்த பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.