பெண் சாவில் திடீர் திருப்பம்: ‘கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கொன்றேன்’ கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த விஜயநகரில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வார திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர். சாமிரெட்டிகண்டிகை ஏகவள்ளி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பால்குடத்தை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக விஜயநகரில் உள்ள அம்மன் கோவிலுக்கு வந்தனர். இதனையடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2019-07-21 23:15 GMT
கொடைரோடு,

கொடைரோடு அருகே பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார். ‘கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கொலை செய்தேன்’ என்று அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொடைரோடு அருகே உள்ள காமலாபுரத்தை சேர்ந்தவர் ஜான்ஜோசப் (வயது 40). மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி கிரேசிமேரி (34). இவர்களுக்கு டோனி (13), லிவின் (10) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 19-ந்தேதியன்று கிரேசிமேரி வீட்டில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் கிரேசிமேரியின் தந்தை சேசுராஜ் புகார் மனு கொடுத்தார். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் கிரேசிமேரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய பாண்டியன், தயாநிதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாருக்கு, ஜான்ஜோசப் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைதான அவர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

என்னுடைய உறவினர் ஒருவருடன், கிரேசிமேரி கள்ளத்தொடர்பு வைத்து இருப்பது தெரியவந்தது. இதை பலமுறை நான் கண்டித்தேன். ஆனால் கிரேசிமேரி கேட்கவில்லை. இதனால் நான் மன வேதனையில் இருந்தேன். கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்த எனக்கும், என் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் எனது கிரேசிமேரியை அடித்து கீழே தள்ளி விட்டேன். இதையடுத்து அவர் மயக்கம் அடைந்தார். உடனே நான் அருகில் இருந்த ஒரு சேலையை எடுத்து கிரேசிமேரி கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் நான் மளிகை கடைக்கு வந்து விட்டேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்