பிவண்டியில் மின்னல் தாக்கி இளம்பெண் பலி சிறுமி உள்பட 4 பேர் காயம்

பிவண்டியில் மின்னல் தாக்கி இளம்பெண் பலியானார். சிறுமி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-07-21 21:30 GMT
தானே, 

தானே மாவட்டம் பிவண்டி தாலுகாவை சேர்ந்தவர் அல்கா(வயது52). இவரது மகள் பிரமிளா(20). நேற்று முன்தினம் பிரமிளா தனது தாயார் மற்றும் 4 வயது அக்காள் மகளுடன் அருகில் உள்ள வயலுக்கு சென்று இருந்தார். பின்னர் அவர்கள் மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். பிரமிளா குடும்பத்துடன் வேறு சிலரும் அந்த வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில் எதிர்பாராதவிதமாக பிரமிளா மற்றும் அவருடன் சென்று கொண்டு இருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கியதில் 4 வயது சிறுமி உள்பட 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில், பிரமிளா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின்னல் தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் பிவண்டி பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்