15-ம் ஆண்டு தொடக்க விழா: சாதனையாளர்கள் 5 பேருக்கு பொற்றாமரை விருது
பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத்தின் 15-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சாதனையாளர்கள் 5 பேருக்கு பொற்றாமரை விருது வழங்கப்பட்டது.
சென்னை,
பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத்தின் 15-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு பொற்றாமரை அமைப்பின் தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். தருமையாதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
விழாவில் சாதனையாளர்கள் 5 பேருக்கு பொற்றாமரை விருது வழங்கப்பட்டது. அதன்படி, சிறந்த சமூக சேவை செய்தமைக்காக அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், சிறந்த சொற்பொழிவாளருக்காக குமாரி சேலம் ருக்மணிக்கும், சிறந்த பதிப்பாளருக்காக வானதி பதிப்பக பதிப்பாளர் ராமநாதனுக்கும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மகாகவி பாரதியாரை கொண்டாடி வந்தமைக்காக வானவில் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ரவிக்கும், சிறந்த இசைக் கலைஞருக்காக ஹரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கும் பொற்றாமரை விருதுகள் வழங்கப்பட்டன.
உலகத் தமிழ் சங்க நிறுவனத் தலைவர் ஜி.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்கள் அனைவருக்கும் தலா ஒரு சவரன் பொற்றாமரை பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
முன்னதாக, கவிஞர் வ.வெ.சு. தலைமையில் தியாகச் சுமங்கலிகள் காரைக்கால் அம்மையார், ஜான்சிராணி, செல்லம்மாள் பாரதி, ராமாயி அம்மாள், பொன்னம்மாள் வாஞ்சி ஆகியோர் குறித்து புலவர் ராமச்சந்திரன், கவிஞர்கள் சுபாஷ், விவேக பாரதி, மலர் மகன், நெல்லை ஜெயந்தா ஆகியோரின் கவியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் தமிழக பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொற்றாமரை அமைப்பின் ஆலோசகர் சந்திரா கோபாலன், பொருளாளர் கோபாலன், பொதுச்செயலாளர் சங்கரன் மற்றும் நடன கலைஞர் ஷோபனா ரமேஷ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.