பங்காரம், முண்டியம்பாக்கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பங்காரம் மற்றும் முண்டியம்பாக்கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2019-07-21 21:30 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கல்லூரி செயலாளர் முருகப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் வீரமணி வரவேற்றார். கல்லூரி தலைவர் மணிவண்ணன் பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், மழை நீரை சேகரிக்க வேண்டிதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தனர். இதில் கல்லூரி கல்வி இயக்குனர் நாராயணசாமி, துணை முதல்வர் சேதுமுருகன், உதவி பேராசிரியர்கள் பரசுராமன், அந்தோணிசாமி மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நேரு யுவகேந்திரா மன்ற செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரூபா லாவண்யா, சம்பத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர்சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடந்தது. இதற்கு மத்திய நீர்வள ஆணைய துணை இயக்குனர் வெங்கடே‌‌ஸ்வரலு தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உதவி செயற்பொறியாளர் விவேகானந்தன், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, சுரே‌‌ஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மகாலிங்கம், உதவி தலைமை ஆசிரியர் சேனாதிபதி, செல்வம், முதுகலை ஆசிரியர் பெருமாள், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது.

மேலும் செய்திகள்