நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதித்த கெடு மீறல்: கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை
பெரும்பான்மையை நிரூபிக்க விதித்த 2 கெடுவையும் குமாரசாமி மீறிய விவகாரம் மற்றும் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறையிடம் கவர்னர் வஜூபாய் வாலா அறிக்கை அளித்துள்ளார். இதற்கிடையே கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பா.ஜனதாவினர் வலியுறுத்தினர்.
இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கடந்த 18-ந் தேதி தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்தார். அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த 18 மற்றும் 19-ந் தேதிகளில் விவாதம் மட்டுமே நடந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டு கொண்டே சென்றதால் 18-ந் தேதி அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கவர்னர் பரிந்துரை கடிதம் அனுப்பினார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்தார். கவர்னர் விதித்த கெடுவின்படி முதல்-மந்திரி குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. பின்னர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரி கவர்னர் விதித்த 2-வது கெடுவையும் முதல்-மந்திரி குமாரசாமி மீறி விட்டார்.
அதேநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி கவர்னர் விதித்த உத்தரவை எதிர்த்து முதல்-மந்திரி குமாரசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், கர்நாடகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது பற்றியும் மத்திய உள்துறையிடம் கவர்னர் வஜூபாய் வாலா அறிக்கை அளித்துள்ளார். அதாவது மத்திய உள்துறை செயலாளருக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் “கூட்டணி அரசில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதுடன், தங்களது ஆதரவு பா.ஜனதாவுக்கு என்று கூறி என்னிடம் கடிதம் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-மந்திரி குமாரசாமிக்கு 2 முறை கெடு விதிக்கப்பட்டது. நான் விடுத்த 2 கெடுவையும் அவர் மீறி விட்டார்.
கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாலும், கர்நாடகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலை யிலும் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்தில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண வேண்டும்” என்று கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சட்டசபையில் நாளை(திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்- மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்கள். குறிப்பாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலையில் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை சந்தித்து பேசினார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது, எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவது குறித்து தேவேகவுடாவுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு குமாரசாமி புறப்பட்டு சென்றுவிட்டார்.
அதைத்தொடர்ந்து, பத்மநாபநகரில் உள்ள தேவேகவுடாவின் வீட்டுக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதனை திரும்ப பெற்றுள்ள ராமலிங்கரெட்டி சென்றார். அங்கு ராமலிங்கரெட்டியுடன் தேவேகவுடா அரை மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகியோரை சமாதானப்படுத்தும்படி ராமலிங்கரெட்டியிடம் தேவேகவுடா கூறியதாக தெரிகிறது. ஏனெனில், ராமலிங்கரெட்டியுடன் சேர்ந்து தான் அந்த எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்திருந்தனர். இதனால் ராமலிங்கரெட்டி மூலமாகவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தலைவர்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வீட்டில் நேற்று மதியம் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த முடியாவிட்டால் திங்கட் கிழமை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை தள்ளிவைக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் ஆலோசித்ததாக தெரிகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றிருப்பதால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும், அதுவரை சட்டசபையில் விவாதத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு விதித்திருப்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி தங்கியுள்ள ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் சென்றனர். அங்கு குமாரசாமியுடன் பரமேஸ்வரும், சிவக்குமாரும் ஆலோசனை நடத்தினார்கள். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பு நடந்த நேரத்தில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரா எம்.எல்.ஏ, அங்கிருந்து சென்று விட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, குமாரசாமியின் உத்தரவின் பேரில் மந்திரி ஜமீர் அகமதுகான் மருத்துவமனைக்கு சென்று நாகேந்திரா எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும்படி நாகேந்திராவிடம் ஜமீர் அகமதுகான் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், மும்பை ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.வான எச்.விஸ்வநாத் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள மாட்டோம். ராஜினாமா முடிவில் இருந்து பின் வாங்க மாட்டோம். நாங்கள் 15 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு வருகிற 22-ந் தேதி (அதாவது நாளை) கூறும் தீர்ப்புக்கு பின்பு அடுத்தகட்ட முடிவு எடுப்போம். ராமலிங்கரெட்டி ராஜினாமாவை திரும்ப பெற்றிருக்க கூடாது. அவரது முடிவு தவறானது, என்றார்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை திரும்ப பெற மாட்டோம் என்று கூறி இருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.