புதுச்சேரி-கடலூர் சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில் 8 பேர் படுகாயம்; கண்ணாடி உடைப்பு, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
புதுச்சேரி-கடலூர் சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் சாலையில் சென்ற கார், மினி லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்பட 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி-விழுப்புரம் பயணிகள் ரெயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டது. இதற்காக கடலூர் சாலையில் ஏ.எப்.டி. மில் அருகே உள்ள ரெயில்வே கேட் இரவு 7.30 மணிக்கு மூடப்பட்டது. ரெயில் சென்றவுடன் மீண்டும் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது.இதனால் அங்கு காத்திருந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று முந்திசெல்ல முயன்றன.
புதுச்சேரியில் இருந்து பாகூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ரெயில்வே கேட்டை கடந்து அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்தொடங்கியது.
இதனால் பஸ்சுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், மொபட் மற்றும் மினி லோடு ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதியது. மேலும் அந்த பஸ் நிற்காமல் எதிரில் தவளக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்துகொண்டிருந்த ஒரு கார் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் கார், மினிலோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள், மொபட்டுகளில் சென்ற மகேந்திரன், (48) மணிகண்டன்(25) பாட்ஷா (43), வசந்தி(42) நாகராஜன்,(43) தமிழ்ச்செல்வன், பழனிசாமி, கடலூர் தினேஷ் (23) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து ஆவேசத்தில் அலறினர். மேலும் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். பஸ் டிரைவர் ஏம்பலம் அருள்(30) என்பவரை அடித்து உதைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போக்குவரத்து போலீசார், முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த விபத்து காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதலியார்பேட்டையில் கடந்த சில தினங்கள் முன்பு தனியார் பஸ் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அதற்குள் நேற்று மீண்டும் புதுச்சேரி-கடலூர் சாலையில் தனியார் பஸ் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சாலையில் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலையில் எந்தவொரு வாகனமும் அவ்வாறு செல்வது கிடையாது. குறிப்பாக தனியார் பஸ்கள் மற்றும் டிராவல்ஸ் பஸ்கள் அதிவேகத்தில் செல்கிறது. மேலும் தனியார் பஸ்கள் ஏர்ஹாரன்களை நகர எல்லைக்குள் இடைவிடாமல் அழுத்தி அதிக ஒலி எழுப்புகிறார்கள். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். எனவே இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.