கோவையில் பல்வேறு இடங்களில் விபசாரம் மசாஜ் சென்டர் உரிமையாளர் உள்பட 7 பேர் கைது 8 இளம்பெண்கள் மீட்பு
கோவையில் பல்வேறு இடங்களில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, மசாஜ் சென்டர் உரிமையாளர் உள்பட 7பேரை கைதுசெய்தனர். மேலும் 8 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-;
கணபதி,
கோவை சரவணம்பட்டியில்உள்ளபிரபல தனியார்வணிக வளாகம் அருகில்அடுக்குமாடி குடியிருப்புஉள்ளது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம்நடத்தப்படுவதாக கோவை சரவணம்பட்டி போலீசாருக்குரகசிய தகவல்கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுதிடீர் சோதனைநடத்தினர். இதில் அங்கு கடந்தசில தினங்களாகவிபசாரம்நடப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்துபுரோக்கர்களான சேலம்கொளத்தூரை சேர்ந்தபிரவீன்குமார் (வயது 29),ஓமலூரை சேர்ந்தஜெயபிரகாஷ் (28)ஆகியோரை போலீசார்கைது செய்தனர். அவர்களிடமிருந்துரூ.10,500, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு இருந்த கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் காஞ்சீபுரம்சோழிங்கநல்லூரை சேர்ந்த25 வயது மதிக்கத்தக்க 2 அழகிகள்மீட்கப்பட்டு கோவையில்உள்ள காப்பகத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல சரவணம்பட்டி- துடியலூர் சாலையில்தனியார் கல்லூரிக்குஅருகில்உள்ள பேக்கரிமுன்பு ரகுதாஸ் என்பவர்,அந்த பகுதியில்வருவோரிடம் உல்லாசமாக இருக்க இளம்பெண்கள்இருப்பதாக கூறிஉள்ளார்.இதுகுறித்ததகவலின்பேரில்சரவணம்பட்டி போலீசார்அங்கு சென்ற போது அவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அங்கு இருந்தவடமாநிலத்தைசேர்ந்த 2இளம்பெண்களை போலீசார்மீட்டு காப்பகத்திற்குஅனுப்பி வைத்தனர்.
சென்னையை சேர்ந்தசங்கீதா என்பவர்வடவள்ளிபகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.இந்தநிலையில்அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாகஅந்த பகுதிமக்கள்குற்றம் சாட்டினர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றவடவள்ளிபோலீசார் விசாரணை நடத்தினர். இதில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.இதைதொடர்ந்துசங்கீதா மற்றும் அவருடைய கணவர்ஜெயவேல், அவர்களுக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் ஹரி கிருஷ்ணன், சித்தார்த், வினோத் ஆகிய5பேரை போலீசார்கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த பல்வேறுமாநிலங்களை சேர்ந்த4 இளம்பெண்களைமீட்டு போலீசார்காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கோவையில் நேற்று ஒரே நாளில் விபசார வழக்கில் 7பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் 8 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.