மும்பையில் துப்பாக்கி முனையில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க விடாமல் பா.ஜனதாவினர் தடுக்கின்றனர் மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
மும்பையில் துப்பாக்கி முனையில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க விடாமல் பா.ஜனதாவினர் தடுக்கின்றனர் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று, அவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளேன். நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை நடைபெற இருப்பதால், அதுபற்றி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினேன். நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். மும்பையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கி முனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிரட்டல்களும் விடுக்கப்படுகிறது. சட்டசபையில் நடந்த விவாதத்தின் போதும், இதை தான் தெரிவித்தேன். இதனால் அவர்களை சந்திக்க முடியவில்லை. மும்பையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களை பறித்து வைத்துள்ளனர்.
இதன் காரணமாக அவர்களை தொடர்பு கொண்டு பேச கூட முடியவில்லை. ஏற்கனவே நான் மும்பை சென்றிருந்த போது மராட்டிய மாநில பா.ஜனதா அரசு போலீசார் உதவியுடன் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க விடாமல் செய்தனர். தற்போதும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியாதபடி என்ன செய்ய வேண்டுமோ, அதனை திட்டமிட்டு பா.ஜனதாவினர் செயல்படுத்தி வருகின்றனர். அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. பா.ஜனதாவினர் அவர்களது அரசியலை செய்கின்றனர். எங்களது அரசியல் வேறு விதமானது.
ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ. பெங்களூரு ஓட்டலில் இருந்து மும்பை சென்றுள்ளார். நெஞ்சுவலி என்று கூறிக் கொண்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஸ்ரீமந்த் பட்டீலை மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க முயன்றுள்ளனர். அதற்கும் அங்குள்ள போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஸ்ரீமந்த் பட்டீலையும் சந்திக்க விடாமல் செய்துள்ளனர்.
சட்டசபையில் அறிவித்தபடி திங்கட் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடை பெறும். கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும். அது எப்படி, எங்கு சாத்தியமாகும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வருவார்களா? என்பதை பற்றி சொல்ல விரும்பவில்லை. அது எப்படி என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.