மும்பையில் 2 வாரத்துக்கு கனமழையை எதிர்பார்க்க முடியாது வானிலை ஆய்வு நிறுவனம் தகவல்

மும்பையில் இன்னும் 2 வாரத்திற்கு கனமழையை எதிர்பார்க்க முடியாது என்று தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-07-19 23:10 GMT
மும்பை,

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை 15 நாட்கள் தாமதமாக தொடங்கியது. அதன்பிறகு அண்மையில் தீவிரமடைந்து பெய்தது. 5 நாட்கள் பெய்த கனமழை காரணமாக நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது. ரெயில் மற்றும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. கனமழைக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அதன்பிறகு மழையின் தீவிரம் குறைந்தது. தற்போது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நகரில் வெப்பநிலை அதிகரித்து உள்ளது. அவ்வப்போது லேசாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் 2 வாரத்திற்கு மும்பையில் கனமழையை எதிர்பார்க்க முடியாது என்று ஸ்கைமெட் தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த நிறுவன துணை தலைவர் மகேஷ் பலாவட் கூறுகையில், வழக்கமாக இந்த இடைவெளி ஆகஸ்டு மாதத்தில் தான் ஏற்படும். ஆனால் ஜூலை மாதத்தில் ஏற்படுவது அபூர்வம். இன்னும் 2 வாரத்திற்கு கனமழையை எதிர்பார்க்க முடியாவிட்டாலும் அவ்வபோது லேசான அல்லது மிதமான அளவு மழை பெய்யும் என்றார்.

மேலும் செய்திகள்