செங்குன்றம் அருகே இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
செங்குன்றம் அருகே இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பாடியநல்லூர், மாதவரம், லட்சுமிபுரம், வடகரை, அலமாதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 3,370 பேருக்கு கடந்த 13-ந் தேதி பாடியநல்லூர் அரசு பள்ளியில் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதில் அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. எனவே தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என அமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் செங்குன்றத்தை அடுத்த அலமாதி அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இலவச மடிக்கணினி கேட்டு பள்ளி முன்பு செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த லாரியின் கண்ணாடிகள் கல்வீசி உடைக் கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.