மும்பை விமான நிலையத்தில் தாதா சோட்டா சகீல் கூட்டாளி கைது துபாயில் இருந்து வந்த போது சிக்கினார்

துபாயில் இருந்து வந்த சோட்டா சகீல் கூட்டாளியைவிமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-17 22:45 GMT
மும்பை,

தாதா சோட்டா சகீலின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் அப்ரோஸ் வடாரியா அகா அகமது ரஷா. இவர் தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் இருவருக்காகவும் ஹவாலா பணபரிமாற்றத்தை செய்து வந்தார். இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், குற்ற சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்தனர். மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

கைது

இந்த நிலையில், நேற்று முன்தினம் துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அப்ரோஸ் வடாரியா அகா அகமது ரஷாவும் அந்த விமானத்தில் வந்திருந்தது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரிகள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று அப்ரோஸ் வடாரியா அகா அகமது ரஷாவை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்