தண்ணீர் இல்லாமல் கருகிய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
கொட்டாம்பட்டி பகுதியில் தண்ணீர் இல்லாமல் கருகிய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததாலும் பருவமழை பெய்யாததாலும் குடிநீர் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வறட்சியால் கடும் பாதிப்படைந்துள்ளது. நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இன்றி முடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணப் பணிகளை தொடங்கவேண்டும்.மதுரை மண்டலத்தில் தென்னை, வாழை உள்ளிட்டவை கருகி அழிந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசு உயர்மட்டக்குழுவை அனுப்பி பார்வையிட்டு நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதிகளில் சுமார் 77 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். இவற்றில் இதுநாள்வரை நிலத்தடி நீர் குறைந்ததால் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் முற்றிலும் கருகி அழிந்து விட்டன. இவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
இப்பகுதிக்கு சிறப்புக் குழுவை உடனே அனுப்பி வைத்து ஆய்வு செய்ய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறேன்.
முல்லை பெரியார் அணை பாசன கடைமடைப் பகுதியை ஒட்டியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் குழாய் மூலம் கொண்டு வந்து கண்மாய்களை நிரப்ப சிறப்புத் திட்டம் மேற்கொள்ள வேண்டுகிறேன். மேலும் குடிமராமத்து பணிகளில் ஆளும் கட்சியினர் தலையீட்டால் ஊழல் முறைகேடு செய்ய முயற்சி செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களிடம் ஒப்படைக்க வற்புறுத்தினால் பணியை ரத்து செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம்முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர், கொட்டாம்பட்டி சொக்கலிங்கபுரம், உதினிபட்டி, அய்யாபட்டி, சூரப்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருகிய தென்னை மரங்களை பார்வையிட்டார்.
மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண், அசாருதீன் உள்பட ஏராளமான விவசாயிகள் உடன் சென்றனர்.