மதுரை ரெயில்நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்க பாதுகாப்பு ஒத்திகை
ரெயில்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்களை கண்காணிப்பதற்காக நடந்த பாதுகாப்பு ஒத்திகையால் மதுரை ரெயில்நிலையத்தில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
திருச்சியில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து மதுரை, நெல்லை மற்றும் திருச்சி ரெயில்நிலையங்களில் போதைபொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல், குற்றச்செயல்களை தடுப்பதற்காக பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து, மதுரை, நெல்லை மற்றும் திருச்சி ரெயில்நிலையங்களில் நேற்று ஒத்திகை நடந்தது.
மதுரை ரெயில்நிலையத்தில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை-தாதர் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில், குருவாயூர் (எக்ஸ்பிரஸ்) ரயில், தூத்துக்குடி-சென்னை இணைப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில், ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில், கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பத்மாகர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் 18 பேரும், தமிழக ரெயில்வே போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் யேசுராஜசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீலன், சிவகாமி உள்பட 33 போலீசாரும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மோப்ப நாய் ஆஸ்டின் ரெயில் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகளை மோப்பம் பிடித்தது. அதேபோல, ரெயில்நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில்நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறும்போது, ரெயில்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருள்கள் கடத்துவது குறித்து கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இதனால், ரெயிலில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு போலீசார் உறுதுணையாக இருப்பர் என்பதை உணர்த்தவும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திடீர் பாதுகாப்பு ஒத்திகையால் நேற்று மதியம் வரை மதுரை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.