வானவில் : கோத்ரெஜின் கண்காணிப்பு கேமராக்கள்

மேஜை நாற்காலி உட்பட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் கோத்ரெஜ் குழுமம் மின்னணு சார்ந்த பொருள் தயாரிப்பிலும் முன்னணியில் திகழ்கிறது.

Update: 2019-07-17 14:29 GMT
அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு, வாஷிங் மெஷின் உள்ளிட்ட சமையலறை சாதனம், அலுவலகத்துக்குத் தேவையான பீரோ, அலமாரி மற்றும் கட்டில், மேஜை நாற்காலி உட்பட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் கோத்ரெஜ் குழுமம் மின்னணு சார்ந்த பொருள் தயாரிப்பிலும் முன்னணியில் திகழ்கிறது. தற்போது வீடுகளுக்கு மிகவும் அவசியமான கண்காணிப்புக் கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது. கோத்ரெஜ் ஈவ் பிடி, கோத்ரெஜ் ஈவ் மினி, கோத்ரெஜ் ஈவ் கியூப் என மூன்று வடிவங்களில் இவை வந்துள்ளன. இவற்றின் விலை ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி ரூ.10 ஆயிரம் வரையாக உள்ளது. இந்த கேமராக்களில் இரவிலும் பொருட்களை துல்லியமாகக் கண்காணிக்கும் நைட்விஷன் கண்ணாடி உள்ளதால் படங்களை தெளிவாக படம் பிடிக்க உதவுகிறது.

இதில் கோத்ரெஜ் ஈவ் பிடி மாடல் பிரீமியம் மாடலாகும். இது அடிப்பகுதியிலிருந்து 360 டிகிரி சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் படங்களை வீடியோ காட்சிகளாக பதிவு செய்ய எஸ்.டி. கார்டு இட வசதியும் உள்ளது. இதன் அடிப்பகுதியில் ஸ்பீக்கர், மைக்ரோ யு.எஸ்.பி. எதெர்னெட் போர்ட் வசதிகள் உள்ளன. கேமரா சுழலுவதற்கு மோட்டார் உள்ளது. அது செயல்படும்போது சத்தம் ஏதும் இருக்காதது இதன் சிறப்பாகும். கோத்ரெஜ் ஈவ் செயலியை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் பதிவிறக்கம் செய்துகொண்டால், கேமராவில் பதிவாகும் காட்சிகளை நீங்கள் இருக்குமிடத்திலிருந்து பார்க்க முடியும். மற்ற இரண்டு மாடல்களான கோத்ரெஜ் ஈவ் மினி, மற்றும் கோத்ரெஜ் ஈவ் கியூப் ஆகியன அளவில் சிறியவை. கியூப் என பெயரிடப்பட்டிருந்தாலும் இதன் அமைப்பு கோள வடிவில் உள்ளது.

மினி கேமராவில் 1.3 மெகா பிக்ஸெல் சென்சார் உள்ளது. இதில் 115 டிகிரி கோணம் வரையிலான காட்சிகள் பதிவாகும். இதிலும் எல்.இ.டி. விளக்கு, மைக்ரோபோன் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. ஆனால் இதில் மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி கிடையாது.

மேலும் செய்திகள்