வானவில் : சோனி நிறுவனத்தின் பிரீமியம் காம்பாக்ட்
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சோனி நிறுவனம் சிறியரக பிரீமியம் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதனால் புகைப்படம் எடுக்கும்போது கைகள் அசைந்தாலும், நடுங்கினாலும் படம் தெளிவாக, துல்லியமாக பதிவாகும்.
இதில் வீடியோ காட்சிகளை ஸ்லோமோஷனில் பதிவு செய்யமுடியும். இதனால் உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் சோனி ஏ.எப். இருப்பதால் செல்பி படங்கள் எடுப்பதும் துல்லியமாக பதிவாகும். சோனி ஆர்.எக்ஸ்.ஓ. மி.மி. என்ற பெயரில் வந்துள்ள இந்த கேமராவின் விலை ரூ.58 ஆயிரமாகும். அனைத்து சோனி விற்பனையகங்களிலும் இந்த கேமரா கிடைக்கும்.