வானவில் : ஜியோமி ரெட்மி 7 ஏ
ஜியோமி நிறுவனம் விலை குறைந்த ஸ்மார்ட் போன் வரிசையில் ரெட்மி 7 ஏ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.5,800-ல் ஆரம்பமாகிறது.
இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகும். இது 5.45 அங்குல திரையைக் கொண்டது. குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 439 இதில் உள்ளது. 2 ஜி.பி., 16 ஜி.பி. நினைவகம் மற்றும் 2 ஜி.பி., 32 ஜி.பி. நினைவகம், 3 ஜி.பி. 32 ஜி.பி. ரேம் கொண்டதாக வந்துள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டுள்ளதோடு எஸ்.டி. கார்டு மூலம் இதன் நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை நீட்டிக்க முடியும்.
நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதில் 12 மெகாபிக்ஸெல் கேமரா பின்பகுதியிலும், செல்பி படமெடுக்க முன்பகுதியில் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.