வானவில் : புட் மஸாஜர்

நவீன உலகில் உடம்பில் ஏற்படும் அலுப்பு, வலிகளை போக்க கருவிகள் வந்துவிட்டன. அந்த வகையில் அன்றாடம் பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் கால்களுக்கு மிகுந்த ஓய்வளிக்கும் வகையில் வந்துள்ளதுதான் ஷியாட்சு புட் மஸாஜர்.

Update: 2019-07-17 11:32 GMT
காலுக்கு போதிய காற்று மற்றும் இதமான வெப்பத்தை உருவாக்கி கால்வலி போக இது உதவுகிறது. காலில் இதை அணிந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தால் கால்வலி பறந்து போவதோடு உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும். காலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இது உதவுகிறது. செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பொத்தான்களும் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.7000.

வெள்ளை, கருப்பு நிறங்களில் இவை வந்துள்ளன. ஏ.பி.எஸ். பிளாஸ்டிக்கால் ஆனது. இதனால் நீடித்து உழைக்கும். காலை உள்ளே நுழைத்து ஜிப் மூலம் மூடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் செயல்படக் கூடியது. காலுக்கு ஓய்வளிக்க விரும்பும் நேரங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக முதியவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ரத்த ஓட்டம் பாய இது உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகள்