வானவில் : மெர்சிடஸ் ஏ.எம்.ஜி.ஏ45

சொகுசு மாடல் கார்கள் என்றவுடன் நினைவுக்கு வரும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபல மாடலில் ஏ.எம்.ஜி. ஏ 45 வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஏ45.எஸ் மாடலும் அறிமுகமாகியுள்ளது.

Update: 2019-07-17 10:20 GMT
ஹேட்ச்பேக் மாடலாக இவை வெளிவந்துள்ளன. இதில் வழக்கமான நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 387 ஹெச்.பி. திறனை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 480 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,000 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. வண்டியை ஸ்டார்ட் செய்து 100 கி.மீ. வேகத்தை 4 வினாடிகளில் தொட்டு விட முடியும். அந்த அளவுக்கு வேகமானது.

மற்றொரு மாடலான ஏ45.எஸ் 100 கி.மீ. வேகத்தை 3.9 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கி.மீ. ஆகும். 8 ஸ்பீடு டியூயல் கிளட்ச் கொண்ட இதில் 6 வகையான ஓட்டுனர் தேர்வு (கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், ஸ்லிப்பரி, தனி நபர் மற்றும் பந்தயம்) நிலைகள் உள்ளன. இந்த இரண்டு மாடலும் விரைவிலேயே விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்