தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
சென்னிமலை அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னிமலை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மேலத்தெருவை சேர்ந்தவர் அயோத்தி ராமு. இவருடைய மகன் நாகராஜ் (வயது 20). தந்தையும், மகனும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள நல்லிக்கவுண்டன்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இதில் அயோத்தி ராமு கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஈங்கூரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் நாகராஜ் டிரைவராக வேலை செய்து வந்தார்.
கமுதி மேலத்தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை நாகராஜ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அயோத்தி ராமுவிடம், நாகராஜ் கூறியதாக தெரிகிறது.
உடனே அவர் இதுபற்றி அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து வைப்பதாக நாகராஜிடம் தெரிவித்து உள்ளார்.
எனினும் காதலித்த பெண் தனக்கு கிடைப்பாளா? என்ற சந்தேகம் நாகராஜுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கட்டிட வேலைக்கு அயோத்தி ராமு, சென்றுவிட்டார். ஆனால் நாகராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மனமுடைந்த நிலையில் இருந்த நாகராஜ் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். இதனால் அவர் வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.