காரைக்குடியில் அரசுப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்
காரைக்குடியில் அரசுப்பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.7லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி ராமநாதன் செட்டியார் அரசு உயர் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். காரைக்குடி தாசில்தார் பாலாஜி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார். விழாவில் ரோட்டரி துணை ஆளுனர் நாச்சியப்பன், கல்வியாளர் சிகரம் சதீஷ், தொழில் அதிபர் பெவின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி, ரோட்டேரியன் தனசேகரன், காமராஜர் பள்ளி தாளாளர் பால்வண்ணன், சங்கர், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சந்திரசேகர், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழுத்தலைவர் சகாயசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ரூ.7 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமரா, பொது ஒலிப்பரப்பி அமைப்பு(ஸ்பீக்கர்), கணினி மேஜை, ஸ்மார்ட் வகுப்பறை சாதனங்கள், மின்விசிறி, சுவர் கெடிகாரம், பிரிண்டர், சுழலும் நாற்காலி, வகுப்பறை மேஜை, வகுப்பறை தடுப்பு, தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக கல்வி சீர்வரிசை பொருட்களை பொதுமக்கள் மற்றும் பெற்றோர் காரைக்குடி தாலுகா அலுவலகம் அருகில் இருந்து பள்ளி வரை மேளதாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் பள்ளியில் அந்த பொருட்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர்கள் உமா, விஜயலட்சுமி, முத்துவேல்ராஜன், ஆசிரியர்கள் விஜய்காந்தி, மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.