மராட்டிய பா.ஜனதா தலைவராக சந்திரகாந்த் பாட்டீல் நியமனம் மும்பை பிரிவு தலைவர் மங்கள் பிரபாத் லோதா

மராட்டிய பா.ஜனதா தலைவராக மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.

Update: 2019-07-16 22:45 GMT
மும்பை,

மராட்டிய மாநில பா.ஜனதா தலைவராக பதவி வகித்து வந்த ராவ் சாகேப் தன்வே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். இதையடுத்து தான் வகித்து வந்த கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று கருதப்படும் நிலையில் மாநில தலைவர் பொறுப்பில் யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் காலியாக இருந்த பா.ஜனதா மாநில தலைவர் பதவியில் மாநில வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். மந்திரிசபையில் முதல்-மந்திரிக்கு அடுத்தபடியாக 2-வது இடம் வகித்து வருகிறார்.

இதேபோல் பா.ஜனதா கட்சியின் மும்பை பிரிவு புதிய தலைவராக மங்கள் பிரபாத் லோதா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே இந்த பதவியை வகித்துவந்த ஆஷிஷ் செலார் சமீபத்தில் மாநில மந்திரியாக பதவி ஏற்றதை தொடர்ந்து, மும்பை பிரிவுக்கும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கட்டுமான அதிபரான மங்கள் பிரபாத் லோதா, பெரும் பணக்கார எம்.எல்.ஏ. என அறியப்படுபவர் ஆவார்.

மேலும் செய்திகள்