2-வது மனைவியை கொன்றவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு

2-வது மனைவியை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-07-16 22:15 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது50). கூலித்தொழிலாளி. மனைவியை பிரிந்து வாழ்ந்த இவர் முருகலட்சுமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து இருந்தார். இந்த நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 16.9.2017 அன்று தகராறு ஏற்பட்டபோது முருகலட்சுமியை, மாரியப்பன் கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்தார். கிருஷ்ணன் கோவில் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதனை நீதிபதி முத்துசாரதா விசாரித்து மனைவியை கொலை செய்த மாரியப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்