மும்பை குடியிருப்பு கட்டிட விபத்து: எனது மனைவி, மகன் எங்கே? படுகாயத்துடன் மீட்கப்பட்டவர் உருக்கம்

மும்பை குடியிருப்பு கட்டிட விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்டவர், தனது மனைவி, மகன் எங்கே என்று உருக்கமாக கேட்டார்.;

Update: 2019-07-16 21:45 GMT
மும்பை,

தென்மும்பையில் உள்ள டோங்கிரி தண்டல் தெருவில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

பலபேரின் உயிரை குடித்த இந்த கோர விபத்தின் பிடியில் இருந்து படுகாயங்களுடன் தப்பியவர் நாவப் சாமானி(வயது 30). இவர் ஜே.ஜே. ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டம் அவரை காப்பாற்றியபோதும், அவரது உறவுகளின் கதி என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து மனவேதனையுடன் அவர் கூறியதாவது:-

கடைசியாக எனக்கு நினைவிருப்பது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தது தான், திடீரென பயங்கர சத்தம் கேட்டது. என் தலையில் ஏதோ தாக்கியது. கண்விழித்து பார்த்தபோது நான் மருத்துவமனை படுக்கையில் இருந்தேன். என் தலையிலும், கையிலும் காயங்கள் இருந்தன.

எனது தாயும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் எனது மனைவி சனா மற்றும் மகன் இப்ராகிம் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்த தகவல் தெரிவிக்குமாறு நான் அதிகாரிகளிடம் கேட்டு வருகிறேன். இதுவரை அவர்களை பற்றிய தகவல் வரவில்லை. விபத்து நடந்து பலமணி நேரம் ஆன பிறகும் அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. இது எனக்கு மிகுந்த பயத்தை ஏற் படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

இடிந்து விழுந்த கட்டிடத்திற்கான வழி குறுகலாக உள்ளதால் மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்வதில் சிக்கல் நீடிப்பது குறிப் பிடத்தக்கது.

மேலும் செய்திகள்