உங்களின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கிகொள்ள வேண்டாம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்
உங்களின் அரசியல் எதிர் காலத்தை பாழாக்கிகொள்ள வேண்டாம் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் நாளை (வியாழக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபையில் நடக்கிறது. இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு மூலம் எங்களுக்கு அநீதி ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அரசு எந்த தவறும் செய்யவில்லை. இதை ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பா.ஜனதாவினர் உங்களை ஏமாற்றிவிடுவார்கள். கோர்ட்டுக்கும் வராமல் உங்களை தடுக்கிறார்கள். உங்களின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கி கொள்ள வேண்டாம்.
இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிருப்தியை கைவிட்டு அரசுடன் இருக்க வேண்டும். உட்கார்ந்து பேசி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு பெற்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டிய வீட்டை விட்டுவிட்டு வேறு எங்கோ போய் ஏன் கஷ்டப்பட வேண்டும்.
நாம் அனைவரும் சகோதரர்களை போன்றவர்கள். எந்த தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். சபாநாயகர் எந்த முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.