பங்காருபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 5 பேர் கைது தமிழகத்தை சேர்ந்தவர்கள்
பங்காருபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப்போயின. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரேநாளில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப்போனது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அறிந்த கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா, குற்றவாளிகளை பிடிக்க தங்கவயல் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசமூர்த்தி மேற்பார்வையில், பங்காருபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார், ராமசமுத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகே பகுதியைச் சேர்ந்த நதீம்(வயது 19), சூளகிரி பகுதியைச் சேர்ந்த முனீர்(20), சின்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(22), குண்டகுர்கி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர்(21), சோட்டானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நதீம் ஆகியோர் என்பதும், அவர்கள் பெங்களூரு, பங்காருபேட்டை, பூதிக்கோட்டை, காமசமுத்திரம் மற்றும் தமிழக பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நதீம் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.