காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம் படத்துக்கு ரங்கசாமி மரியாதை செலுத்தினார்

காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;

Update: 2019-07-16 00:29 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரியாங்குப்பம், முருங்கப்பாக்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவ படத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டில் அரியாங்குப்பம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரங்கசாமி வழங்கினார்.

விழாவில் முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், அரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவல் குழுதலைவர் இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை பாஸ்கர் வரவேற்றார்.

புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை அறங்காவலர் அனுதா பூனமல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நடேசன் காங்கேயன் காமராஜரின் கல்விப்பணி குறித்து பேசினார்.

தொடர்ந்து மாணவர்களின் பேச்சுப்போட்டி, இசை, நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

சாரம், சாத்தியா நகர், அரும்பார்த்தபுரம் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளிகளிலும் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி சாந்திநகர் அன்பாலயா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் அன்பழகன் தலைமையில் காமராஜர் பிறந்த தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் பால்மரியதாஸ் வரவேற்று பேசினார். விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி மாநில சிவாஜி தலைமை மன்றம் சார்பில் பிள்ளைதோட்டத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சிவாஜி மன்ற மாநில தலைவர் மாயன் தலைமையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஓம்சக்தி ரமேஷ், சுந்தரராஜன், மோகனசுந்தரம், நடராஜன், தனஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்