பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்க கோரி கிராமமக்கள் மனு

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் அரசுக்கு மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தங்களுக்கு சாதிசான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.;

Update: 2019-07-15 22:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் பாண்டறவேடு, காவராஜப்பேட்டை, கீளப்பூடி, பெருமாநெல்லூர், மேலப்பூடி, மோட்டூர், சொரக்காயப்பேட்டை, ராமச்சந்திராபுரம், படுதலம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொண்டாரெட்டி இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 800 பேர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் அரசுக்கு மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தங்களுக்கு சாதிசான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் வந்தனர்.

அப்போது, தாசில்தாரை சந்தித்து தங்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கும்படி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்