கன்னியாகுமரி மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு தளவாய்சுந்தரம், கலெக்டர் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2019-07-15 23:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் அரசு சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் பங்கேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜாண்தங்கம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன், நகர செயலாளர் வின்ஸ்டன், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி, மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.இதில் மாவட்ட துணைத்தலைவர் தாமஸ், செயலாளர் வடலிவிளை மகாலிங்கம், மாநில காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் வக்கீல் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் சக்திவேல் முருகன், கொள்கை பரப்பு செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் அருள்ராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்