மத்திய கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2370 காலியிடங்கள்

மத்திய கல்வி நிறுவனத்தில் 2 ஆயிரத்து 370 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-07-15 09:26 GMT
நவோதயா வித்யாலயா சமிதி மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்றாகும். தற்போது இந்த அமைப்பில் உதவி கமிஷனர் (குரூப்-ஏ), ஸ்டாப் நர்ஸ், சட்ட உதவியாளர், கேட்டரிங் அசிஸ்டன்ட் போன்ற அலுவலக பணியிடங்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 2 ஆயிரத்து 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிகமாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் 1154 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணியிடங்கள் வாரியாக காலியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. இளநிலை ஆசிரியர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி கமிஷனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை படிப்புடன் பி.எட் படித்தவர்கள், முதுநிலை ஆசிரியர் பணிக்கும், இளநிலை படிப்புடன் பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள், சட்டப்படிப்பு படித்தவர்கள், கேட்டரிங் 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு படிப்புடன் தட்டச்சு படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு/ கணினித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்டு 9-ந்தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.navodaya.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்